சினிமாவில் இடைவேளையை ஒழிக்க வேண்டும்… இயக்குனர் சீனு ராமசாமி!
தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை மற்றும் மாமனிதன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ள சீனு ராமசாமி, ஜி வி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இடிமுழக்கம் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த அந்த படம் ரிலீஸாகவில்லை. இதையடுத்து அவர் புதுமுக நடிகர் ஏகன் நடிக்கும் கோழிப்பன்னை செல்லதுரை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரிகிடா சஹா கதாநாயகியாக நடிக்க யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பாக டி.அருளானந்த், மேத்யூ அருளானந்த் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்துக்கு ரகுநந்தன் இசையமைக்க, வைரமுத்து, பா விஜய் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர். படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 20 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சீனுராமசாமி “சினிமாவில் ஏதாவது மாற்றத்தை உருவாக்க வேண்டுமென்றால் இடைவேளை என்பதை நாம் ஒழிக்க வேண்டும். ஏனென்றால் சினிமா என்பது ஒரு முழு தரிசனம். அப்படி ஒரு முழு தரிசனம் இந்த படத்தில் உங்களுக்குக் கிடைக்கும்.” எனக் கூறியுள்ளார்.