செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 15 டிசம்பர் 2021 (19:20 IST)

வெளிநாட்டில் வேலை செய்த இடத்தைப் பார்த்த விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி துபாயின் தான் வேலை செய்த இடத்தை சென்று பார்த்துள்ளார்.

ஐக்கிய அமீரகத்தின் 50 வது பொன்விழா துபாயில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்ளச் சென்ற நடிகர் விஜய் சேதுபதி விழாவின் பேசியதாவது:

துபாய்க்கு நான் கடந்த 2000- ஆம் ஆண்டு மிகப்பெரிய லட்சியங்களுடன் வேலைக்கு வந்தேன். இங்கு வந்ததும் இந்த் நாட்டை எனது இரண்டாவது தாயகம் போல் உணர்ந்தேன்.  இங்குள்ள பர்துபாய் மற்றும் அல் பஹித் ஆகிய அசாலைகளில் நான் கனவுகளுடன் நடந்து சென்றுள்ளேன் .

மேலும் தான் சினிமாவில் நடிக்க வந்து இப்போது இந்த நிலைக்கு வந்துள்ளது ஒரு விபத்து என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.