திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வியாழன், 28 அக்டோபர் 2021 (20:57 IST)

ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில்,சிறுத்தை சிவா இயக்கத்தில், உருவாகியுள்ள அண்ணாத்த பட டிரைலர் நேற்று மாலை ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்று, யூடியூப்பில் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது வழக்கமான பரிசோதனைக்கான சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.