கமல்ஹாசனுடன் இணையும் வெற்றிமாறன்?
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன்.. நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகத் தகவல் பரவிவருகிறது.
தமிழ் சினிமாவில் ஆடுகளம், பொல்லாதவன், வடசென்னை, அசுரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வெற்றிமாறன்.
தற்போது சூரி நடிப்பில் விடுதலை என்ற படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். அதேபோல்,சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.
இப்படத்திற்குப் பின் விரைவில் விஜய்யுடன் இணையவுள்ளதாக வெற்றிமாறன் கூறினார்.
அதேபோல், விரைல் கமல்ஹாசனை வைத்து வெற்றிமாறன் ஒரு படம் இயக்கவுள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.