புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 28 ஜூலை 2022 (15:25 IST)

ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட விஜய் பட ஹீரோயின்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தில் ஹீரோயினாக நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தனா.

இவர், துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்துள்ள படம் சீதா ராமம். இப்படத்தின் புரமோஷன்  நிகழ்ச்சி தற்போது சென்னையில்  நடந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ராஷ்மிகா மந்தனாவிடம், புஷ்பா, சீதா ராமம் உள்ளிட்ட தெலுங்குப்பட புரமோசன்கள் சென்னையில் நடந்தபோது, நீங்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை என ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த ராஷ்மிகா, எனக்கு அப்போது, சில முக்கிய வேலைகள் இருந்ததால் என்னால் அதில் பங்கேற்க முடியவில்லை; இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்…

இனி வரும் காலங்களில் என்னை சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் பார்க்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.