1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 27 ஜூலை 2022 (15:41 IST)

இப்படத்தின் நடிக்க ஒரு தயக்கம் இருந்தது- ராஷ்மிகா மந்தனா

seetha rama
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகர் துல்கர் சல்மான். இவர் தெலுங்கில் நடித்துள்ள படம் சீதா ராமம். இப்படம் இவரது இரண்டாவது தெலுங்குப் படமாகும்.

இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். விஜய்66 பட ஹீரோயின் இப்படத்தில் ஆபரின் என்ற கேரக்டர் ரோலில் நடித்துள்ளார்.

இப்பத்தின் டிரைலர் ரிலீஸ் சமீபத்தில் நடந்தது அப்போது, பேசிய ராஷ்மிகா, துல்கர் சம்மான்- மிருணாள் தாக்கூர் இருவரின் கதையைப் சொல்லி இப்படத்தை நகர்த்தும் கேரக்டரில் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறேன்.

இப்படத்தைப் பற்றி அவர் கூறும் போது, இப்படத்தில் நடிக்கும் முன் ஒரு தயக்கம் இருந்ததாகவும் அதன் பின்  தனது கேரக்டர் பிடித்திருந்ததாலும் இயக்குனர் ஹனுராகவபுடி கொடுத்த உற்சாகத்தில் நடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படம் 70 களில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது குறிப்பிடத்தக்கது.