மாஸ்டர் படத்தில் விஜய் சொல்லும் குட்டிக் கதைகள் – அஜித் ரசிகர்களும் கொண்டாட்டம்!
மாஸ்டர் படத்தில் விஜய் கதாபாத்திரம் தன்னுடைய காதல் கதைகளாக சுற்றி இருப்பவர்களிடம் சொல்லும் குட்டிக்கதைகள் ரசிகர்களை ஈர்த்துள்ளன.
மாஸ்டர் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி கடந்த ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸாகியுள்ளாது. சமூகவலைதளமெங்கும் மாஸ்டர் கொண்டாட்டமாக இருக்கிறது. அதில் முதல் பாதி சிறப்பக இருப்பதாகவும், இரண்டாம் பாதி மிகவும் மெதுவாக நீளாமாக இருப்பதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் வசூல் அளவில் மாஸ்டர் திரைப்படம் வெற்ற்கிகரமாகவே திகழ்கிறது.
இந்த படத்தில் ரசிகர்களைக் கவரும் அம்சமாக எல்லோரிடமும் விஜய் சொல்லும் குட்டிக்கதைகள் உள்ளன. ஜேடி கதாபாத்திரம் தான் காதலில் தோல்வி அடைந்துவிட்டதாக மற்றவர்களிடம் எல்லாம் ஒவ்வொரு முறையும், புன்னகை மன்னன், கஜினி, டைட்டானிக் மற்றும் காதல் கோட்டை உள்ளிட்ட படங்களின் கதையை தனக்கு நடந்தது போல சொல்கிறார். இந்த காட்சிகள் எல்லாம் தியேட்டர்களில் விசில் பறக்கும் ஒன்றாக அமைந்துள்ளன. அதிலும் அஜித்தின் காதல் கோட்டை திரைப்படத்தின் கதையை தனக்கு நடந்ததாக அவர் சொல்லும் போது அஜித் ரசிகர்களும் அதைக் கொண்டாடுகின்றனர்.