செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 15 ஜனவரி 2021 (08:44 IST)

இரண்டே நாட்களில் போட்ட பணத்தை எடுத்த ‘மாஸ்டர்’ விநியோகிஸ்தர்கள்!

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் நேற்று முன் தினம் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் வெளியானது என்பதும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி நடுநிலை ரசிகர்களும் இந்த படத்தை ரசித்து பார்த்தார்கள் என்பதும் அனைவருக்கும் இந்த படம் ஒரு பொங்கல் விருந்தாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ‘மாஸ்டர்’ படத்தை அதிக விலை கொடுத்து விநியோகிஸ்தர்கள் வாங்கி உள்ளதாகவும் இதனால் அவர்கள் இந்த படத்தின் முதலீட்டை எடுப்பது சந்தேகம் என்றும் ரிலீசுக்கு முன்னர் கூறப்பட்டது 
 
ஆனால் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் இரண்டே நாட்களில் ‘மாஸ்டர்’ படத்திற்கு போட்ட முதலீட்டை விநியோகஸ்தர்கள் எடுத்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழகம் மற்றும் ஆந்திரா கேரளா தெலுங்கானா கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள விநியோகிஸ்தர்கள் கிட்டத்தட்ட 80% தாங்கள் போட்ட முதலீட்டு பணத்தை எடுத்து விட்டதாகவும் இனி வரக்கூடிய வசூல் அனைத்தும் லாபம்தான் என்றும் கூறப்படுவதால் விநியோகிஸ்தர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது 
 
விஜய்யின் திரைப்படத்தை வாங்கிய எந்த விநியோகஸ்தரும் பெரும்பாலும் நஷ்டம் அடைவது இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளதாக திரைஉலகிலும், விநியோகஸ்தர்கள் மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது