வெளியூரில் இருந்தாலும் மாஸ்டர் படம் பார்த்து வாழ்த்திய இயக்குனர்!

Last Modified வெள்ளி, 15 ஜனவரி 2021 (14:58 IST)

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை பார்த்த இயக்குனர் மோகன் ராஜா வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி நேற்று முன் தினம் முதல் உலகமெங்கும் ரிலீஸாகியுள்ளாது. சமூகவலைதளமெங்கும்
மாஸ்டர் கொண்டாட்டமாக இருக்கிறது. அதில் முதல் பாதி செம்மயாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி மிகவும் மெதுவாக செல்வதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இரண்டு நாட்கள் ஆன நிலையில் இப்போது எதிர்மறை விமர்சனங்களும் வர ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் இயக்குனர் மோகன் ராஜா ஹைதராபாத்தில் மாஸ்டர் திரைப்படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘பிரியாமனவர்களின் மாஸ்டர் ஸ்ட்ரோக். குறிப்பாக நண்பர் விஜய்யின் கவர்ந்திழுக்கும் தன்மை. ரணகளமான விஜய் சேதுபதி, அருமையான இயக்கத்தை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்’ ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :