புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 24 அக்டோபர் 2017 (10:38 IST)

இந்தியாவின் ஜாக்கி ஜான் விஜய்; பிரபலத்தின் ஓபன் டாக்

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடித்துள்ள படம் மெர்சல். இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக உலகம் முழுதும் வெளியானது. சமந்தா, காஜல், நித்யா மேனன் 3 நாயகிகள் இந்த படத்தில் நடித்துள்ளனர். 

 
விஜய்யின் மெர்சல் படம் தமிழில் உருவான ஒரு பிரம்மாண்ட படம். இப்படம் தெலுங்கு, கேரளா மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் வெளியாகி இருந்தது. சர்வதேச அளவில் இப்படம் ஆங்கிலத்தில் துணைத் தலைப்பு போடப்பட்டு வெளியாகி  இருந்தது. மெர்சல் படத்தை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தவர் ரேக்ஸ், இவரை பலருக்கும் தெரியாது என்பது உண்மை.
 
அண்மையில் இவர் ஒரு பேட்டியில், காவலன் படத்தின் வேலைகளுக்கு நடுவில் சீனாவில் நடந்த ஷாங்காய் சர்வதேச  திரைப்பட விழாவில் (Shanghai International Film Festival) நானும், விஜய்யும் கலந்து கொண்டோம். அங்கு இருந்த ரசிகர்கள் அனைவரும் விஜய்யை இந்தியாவின் ஜாக்கி ஜான் என்று கொண்டாடினார்கள். அப்போது விஜய்யும்  ரசிகர்களின் கொண்டாட்டத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தாக ரேக்ஸ் தெரிவித்துள்ளார்.