செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 23 அக்டோபர் 2017 (18:08 IST)

'மெர்சல்' சென்சாரை திரும்ப பெற வேண்டும்: சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திற்கு பாஜகவினர் பிரச்சனை கொடுக்க கொடுக்க அந்த படத்தின் வசூல் எகிறிக்கொண்டே போகிறது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் மெர்சல்' படத்தின் சென்சாரை திரும்ப பெற கோரி பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



 
 
'மெர்சல்' படத்தில் இந்திய இறையாண்மையை சீர்குலைக்கும் காட்சிகள் இருப்பதாகவும், எனவே அந்த படத்திற்கு வழங்கப்பட்ட சென்சாரை திரும்ப பெற வேண்டும் என்று வழக்கறிஞர் அஷ்வத்தாமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்
 
மேலும் அயல்நாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரில் இந்திய இறையாண்மைக்கு எதிராக வசனம் பேசிய விஜய், சமந்தா உள்பட இந்த படத்தில் பணிபுரிந்த 10 பேர்களின் மீது வழக்கு தொடர வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.