வாவ்!! வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்: ஹைவே மாஃபியா கதைக்கு செம காம்போ...
எழுத்தாளர் சுசித்ரா ராவ் கால்நடைகல் கடத்த்ல் தொடர்பான கதை ஒன்றை எழுத்தி புத்தகமாக வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்திற்கு 'தி ஹைவே மாஃபியா' என பெயரிட்டுள்ளார்.
இந்த கதை அரசியல் கலந்த த்ரில்லர் பின்னணியை கொண்டுள்ளதால் இந்த கதையை படமாக எடுக்கும் திட்டமும் அவருக்கு உள்ளதாம். அப்படி படமாக எடுத்தால் இந்த படத்தின் ஹீரோ விஜய் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறியது பின்வருமாறு, எனது கதையை திரைப்படமாக எடுத்தால் தமிழில் கதையின் நாயகனான அர்ஜுன் விஜய்யும், தெலுங்கில் மகேஷ் பாபுவும், கன்னடத்தில் யாஷும் பொருத்தமாக இருப்பார்கள்.
ஏன் விஜய் என்றால், விஜய்யிடம் அந்த ஸ்டைல் உள்ளது. விஜய்யை தவிர எனது கதைக்கு ஹீரோ என்றால் வேறு யாரும் என் நினைவுக்கு வரவில்லை. இந்த கதையை தமிழில் வெற்றிமாறன் அல்லது பி.எஸ்.மித்ரன் இயக்கினால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.