திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 17 ஜனவரி 2019 (14:54 IST)

அஜித், விஜய் குறித்து பேசிய யுவன்ஷங்கர் ராஜா : வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் இரண்டு பெரிய நட்சத்திரங்கள் விஜய், அஜித் ஆவர். இவர்களின் படங்கள் ஒவ்வொரு பொங்கல் ,தீபாவளி பண்டிகையின் போதும் வெளியாகிவிடும். அதை ரசிகர்கள் பெரிதாக கொண்டாடுவார்கள்.
சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் யாக்கை பட புரோமோஷனில் கலந்து கொண்ட யுவன்ஷங்கர்  ராஜாவிடம் ஒரு செய்தியாளர் அஜித் , விஜய் ஆகிய இருவரிடமிருந்து பட வாய்ப்புகள் வந்தால் யார் படத்தை முதலில் ஒப்புக்கொள்வீர்கள் என்று கேட்டதற்கு , அந்நொடியிலேயே தல என்று பதிலளித்தார்.  தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 
 
அஜித் நடிக்கும் 59 வது படத்திற்கு யுவன்ஷ்ங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.