விஜய்-ஜிவி பிரகாஷ் இணையும் படம் குறித்த முக்கிய தகவல்

Last Modified வியாழன், 17 ஜனவரி 2019 (07:18 IST)
ஜிவி பிரகாஷ் நடித்த '100% காதல்', 'ஐங்கரன்' மற்றும் 'சர்வம் தாளமயம்' ஆகிய மூன்று படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் அவர் நடித்த 'குப்பத்து ராஜா' திரைப்படத்தின் படப்பிடிப்பும் நிறைவடையும் நிலையில் உள்ளது

இந்த நிலையில் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் 'வாட்ச்மேன்' என்ற த்ரில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷனும் தொடங்கிவிட்டது.

அந்த வகையில் இந்த படத்திற்கான புரமோ பாடல் ஒன்றை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்துள்ளார். இந்த பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.


ஜிவி பிரகாஷ், சம்யூக்தா ஹெக்டே, யோகிபாபு உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பும் செய்துள்ளனர். டபுள்மீனிங் புரடொக்சன்ஸ் தயாரித்து வரும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாக வாய்ப்பு உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :