1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: சனி, 16 அக்டோபர் 2021 (20:19 IST)

உதயநிதியை வாழ்த்திய விஜய் பட இயக்குநர்

டாக்டர் மற்றும் பீஸ்ட் பட இயக்குநர் நடிகர் உதயநிதிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி, அருண்ராஜா காமராஜ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

 
இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டரை  இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த படத்திற்கு நெஞ்சுக்கு நீதி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மற்றும் திமுகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலைஞரின் சுயசரிதைக்கு நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் இந்த படத்தில் ஆரி, தன்யா ரவிச்சந்திரன். சிவானி ராஜசேகர். யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன் மயில்சாமி உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், டாக்டர், கோலமாவு கோகிலா, பீஸ்ட் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ,ஆர்டிக்கிள் 15 பட இயக்குநர் அருண்ராஜா காமராஜ் மற்றும் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஆகிய இருவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது