1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 16 அக்டோபர் 2021 (10:03 IST)

ஹேப்பி பர்த்டே ராக்ஸ்டார் அனிருத்... 3 முதல் டாக்டர் வரை!

தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் அனிருத் தற்போது வளர்ந்து வரும் இசை கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகிறார்.  திறமை ஒரு பக்கம் இருந்தாலும் இவருக்கு கிடைத்த இன்னொரு மிகப்பெரிய லக் என்னவென்றல்,  சூப்பர் ஸ்டாரின் உறவினர் என்பது தான்.
 
இவர் இசையமைத்த முதல் திரைப்படம் 3. இந்த 3 திரைப்படத்தின் வொய் திஸ் கொலவெறி என்ற பாடலின் மூலம் மிகப்பெரும் அளவில் பிரபலமடைந்தார். இவரது இசை பயணத்தின் தொடக்கத்தில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசை அமைத்து தொடர் ஹிட் பாடலை கொடுத்ததால் தமிழ் சினிமா இயக்குனர்கள் கவனம் இவர் மீது பாய்ந்தது. 
 
அதன் பின்னர் ரஜினி, விஜய், அஜித் , சிவகார்த்திகேயன் என டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்க துவங்கி ராக்ஸ்டார் அனிருத் என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். கடைசியாக அவரது இசையில் வெளியான திரைப்படமும் ஹிட் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று 31வது பிறந்தநாள் கொண்டாடும் அனிருத்துக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.