செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வெள்ளி, 15 அக்டோபர் 2021 (11:28 IST)

டாக்டர் வெற்றியை வைத்து கல்லா கட்டபோகும் சன் தொலைக்காட்சி!

டாக்டர் திரைப்படம் இப்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரங்கள் வரை திரையரங்குகளில் ஓட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர் திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கிடைத்துள்ளதை அடுத்து திரையரங்குகளில் கூட்டம் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படம் முதல் நாளில் தமிழகம் முழுவதும் 7.45 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில் 2-வது நாளில் முதல் நாள் வசூலை விட அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இரண்டாவது வாரத்திலும் படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த இமாலய வெற்றியை சூட்டோடு சூடாக பயன்படுத்திக் கொள்ள சன் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளதாம். அதையொட்டி தீபாவளி அன்றே டாக்டர் படத்தை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளதாம். இதன் மூலம் சன் தொலைக்காட்சியின் டி ஆர் பி எகிறும் என சொல்லப்படுகிறது.