வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 20 ஆகஸ்ட் 2022 (09:15 IST)

முதல் முறையாக தொலைக்காட்சியில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம்… வெளியான அறிவிப்பு

விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்த பீஸ்ட் திரைப்படம் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பீஸ்ட் திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து தோல்வியை சந்தித்தது. படத்தின் மோசமான திரைக்கதை காரணமாக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். சமூகவலைதளங்களில் மீம்களும் ட்ரோல்களும் உருவாகின. குறிப்பாக படத்தின் இயக்குனர் நெல்சன் கடுமையாக தாக்கப்பட்டார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய்யின் தோல்விப் படமாக பீஸ்ட் அமைந்தது. இந்நிலையில் ஏற்கனவே ஓடிடியில் இந்த திரைப்படம் ரிலீஸாகிவிட்ட நிலையில் முதல் முறையாக பிரபல தெலுங்கு தொலைக்காட்சி சேனலான ஜெமினி சேனலில் இந்த திரைப்படம் விரைவில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.