வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (18:49 IST)

ரூ.200 கோடி பட்ஜெட் - சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி விஜய் பட நடிகை...#SSMB28update

ssmb28
சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் புதிய படம்குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி டிரெண்டிங் ஆகி வருகிறது.

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் மகேஷ்பாபு. இவர்  நடிப்பில் வெளியான படம் சர்க்காரு வாரு பட்டா. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து,., மகேஷ்பாபுவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பபார்த்தனர். அதற்கேற்ப தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை தயாரப்பு  நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மகேஷ்பாபுவின் 28 வது படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார்,இப்படத்தை இயக்குனர் திரிவிக்ரம் இயக்கவுள்ளார்.  200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகும் இப்படம் ஆக்சன் திரில்லரில் உருவாகிறது.  தமன் இசையமைக்கிறார்.

இதனால் சினிமா ரசிகர்கள் இந்த அறிவிப்பை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இணையதளத்தில் super star Mahesh babu28  என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.

மேலும், இப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.