திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2022 (17:25 IST)

விஜய்யின் ''வாரிசு ''பட வீடியோ லீக்! இயக்குனர் போட்ட தடை உத்தரவு!

Varisu
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் தெலுங்கு இயக்குனர்  வம்சி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும்  படம் வாரிசு. இப்படத்தை தில்ராஜு தயாரித்து வருகிறார்.

இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா  நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து,  சரத்குமார், ஷ்யாம், பிரகாஷ்ராஜ், யோகிபபு, சங்கீதா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வாரிசு படத்தின் போஸ்டர் விஜய் பிறந்த நாளில் ரிலீஸானது.   சமீபத்தில் விசாகப்பட்டிணம் துறைமுகத்தில் விஜய் சண்டைப்போடும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரலானது.

இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது. இந்த  நிலையில்  இயக்குனர் வம்சி ,படக்குழுவினர் யாரும் படப்பிடிப்பு தளத்திற்கு செல்போன் கொண்டு வரக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.