ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2022 (20:11 IST)

சிக்கனமாய் இருக்கும் நடிகர் விஜய்? தயாரிப்பாளர் ஆச்சர்யம்

vijay pooja
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் தெலுங்கு இயக்குனர்  வம்சி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும்  படம் வாரிசு. இப்படத்தை தில்ராஜு தயாரித்து வருகிறார்.

இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தா நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து,  சரத்குமார், ஷ்யாம், பிரகாஷ்ராஜ், யோகிபபு, சங்கீதா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வாரிசு படத்தின் போஸ்டர் விஜய் பிறந்த நாளில் ரிலீஸானது.   சமீபத்தில் விசாகப்பட்டிணம் துறைமுகத்தில் விஜய் சண்டைப்போடும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரலானது.

இந்த நிலையில், வாரிசு படத்தின் காஸ்டியூம் டிசைனர் தரும்  உடைகளின் மிக எளிய உடைகளையே அவர் விரும்பியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், தமிழ் சினிமா அல்லது மற்ற சினிமாவில் உள்ள நடிகர்கள் தங்களின் படங்களுக்கு அதிக விலையுள்ள  உடைகளை மட்டுமே வாங்கி வரும்  நிலையில், சூப்பர் ஸ்டார் நிலையிலுள்ள விஜய் வாரிசு படத்தில் மிகப் பெரிய செல்வந்தரின் மகனாக  நடிக்கும்போதுகூட எளிமையான உடைகளை தேர்ந்தெடுப்பது தயாரிப்பாளரை மட்டும் அல்ல படக்குழுவினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

 விஜய் ஏற்கனவே சன்டிவி நிகழ்ச்சியில் 100 ரூபாய் பிரியாணி தான் தனக்குப் பிடிக்கும் என கூறியது குறிப்பிடத்தக்கது.