விஜய் ஆண்டனி நடிக்கும் ஹிட்லர்… இயக்குனர் இவரா?
இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி நான் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். இந்த படம் வெற்றிப் பெற்றதை அடுத்து தொடர்ந்து நடிப்பிலும் இசையிலும் கவனம் செலுத்தி வந்தார்.
விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் 2016ல் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் எதிர்பாராத வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி மாஸ் ஹீரோ ஆனார் விஜய் அண்டனி. சமீபத்தில் இதன் இரண்டாம் பாகம் பிச்சைக்காரன் 2வும் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில் இப்போது விஜய் ஆண்டனி ஹிட்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை படைவீரன் படத்தின் இயக்குனர் தனா இயக்கி வருகிறார். ஏற்கனவே விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் தயாரிக்கிறாராம்.