1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated: வியாழன், 25 மே 2023 (14:38 IST)

உடல்நலம் சரியில்லை என வெளியான வதந்தி..அஜித் பட நடிகர் விளக்கம்!

suresh gopi actor
மலையாள சினிமாவில் முன்னனி நடிகர் சுரேஷ் கோபி ''நான் நன்றாக இருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர் சுரேஷ். இவர்  நடிகர் அஜித்குமாருடன் இணைந்து  தீனா என்ற படத்திலும், விக்ரமும் இணைந்து ஐ படத்திலும், சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான தமிழரசன் படத்திலும் நடித்துள்ளார்.

இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த நிலையில், சினிமாவில் மோகன்லால், மம்முட்டி போன்ற சூப்பர் ஸ்டார்களுக்கு  இணையாக நடித்து வந்த அவர் அரசியலில் கவனம் செலுத்தியதால், சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

தற்போது மீண்டும் பல புதிய படங்களில் நடித்து வருகிறார்.  இந்த நிலையில் நடிகர் சுரேஷ் கோபிக்கு உடல்நலம் சரியில்லை என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியது.

இதுகுறித்து நடிகர் சுரேஷ் கோபி விளக்கம் அளித்துள்ளார்  . அதில்,’’ நான் நன்றாக இருக்கிறேன்.  இறைவன் அருளால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, தற்போது கருடன் என்ற பட ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்து வருகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.