’வேட்டையன்’ படத்துடன் ரிலீஸ் ஆகிறதா ‘விடாமுயற்சி’ டீசர்? ரஜினி, அஜித் ரசிகர்கள் குஷி..!
ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் வரும் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் இடைவேளையில் 'விடாமுயற்சி' படத்தின் டீசர் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதையடுத்து, ரஜினி, அஜித் ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம், அஜித் நடித்த 'விடாமுயற்சி' படத்தையும் தயாரித்துள்ளது என்பதும், 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், 'விடாமுயற்சி' படத்தின் டீசர் அவசர அவசரமாக தயாராகி வருவதாகவும், வேட்டையன் படத்தின் இடைவேளையின் போது 'விடாமுயற்சி' படத்தின் டீசர் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால், அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு வேட்டையன் படம் பார்க்கப் போகும்போது செம விருந்து காத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.
Edited by Siva