வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2024 (13:09 IST)

மங்காத்தாவுல மிஸ் ஆனது, இப்ப நனவாயிடுச்சு… அஜித்தோடு நடிப்பதை உறுதி செய்த பிரபல ஹீரோ!

அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் திட்டமிடப்பட்டதை விட முன்பே மே மாதம் தொடங்கியது.

அதன் பின்னர் கடந்த சில வாரங்களாக மீண்டும் நடந்த அடுத்த கட்ட ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது.இந்நிலையில் இந்த படத்தில் நாளுக்கு நாள் பிரபல நடிகர்கள் இணைந்து வருகிறார்கள். ஏற்கனவே சுனில் மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோர் இணைந்த நிலையில் தற்போது நடிகர் பிரசன்னாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்பட்டது.

இப்போது அதை உறுதி செய்துள்ளார் பிரசன்னா. இது சம்மந்தமாக அவர் தன்னுடைய சமூகவலைதளப் பதிவில் “மங்காத்தா படத்திலேயே அஜித்துடன் நான் நடிக்க வேண்டி இருந்தது. அப்போது மிஸ்ஸாகிவிட்டது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. இப்போது நான் குட் பேட் அக்லியில் நடிக்கிறேன். இறைவனுக்கும், அஜித் சாருக்கும், ஆதிக்குக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.