செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2024 (10:28 IST)

'வேட்டையன்’ படத்திற்கு தடை விதிக்க வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "வேட்டையன்" படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருப்பதாக கூறப்படுகிறது.
 
"வேட்டையன்"  படத்தில் இடம்பெற்ற என்கவுன்டர் சம்பவங்களுக்கான வசனங்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து மதுரையைச் சேர்ந்த பழனிவேலு என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  என்கவுன்டர் வசனங்களை நீக்கும் வரை படத்தைத் தடை செய்யவேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். "வேட்டையன்" படத்திற்கு தடை கோரிய மனு இன்றே விசாரணைக்கு வருகிறது.
 
நேற்று வெளியான "வேட்டையன்" படத்தின் டிரெய்லர் வெளியான பிறகு, இப்படத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. "வேட்டையன்" திரைப்படம் வரும் 10 ஆம் தேதி வெளியீடு ஆக உள்ளது.
 
ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா டகுபாய், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகினி, ரமேஷ் திலக், ரக்சன், ஜிஎம் சுந்தர் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
 
அனிருத் இசையில் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில், பிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
 
 
Edited by Mahendran