1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : புதன், 2 அக்டோபர் 2024 (17:36 IST)

என்கிட்ட இருந்து அவனை யாராலும் காப்பாற்ற முடியாது: ‘வேட்டையன்’ டிரைலர்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் வரவிருக்கும் பத்தாம் தேதி வெளியாக உள்ள நிலையில், சில நிமிடங்களுக்கு முன்பு இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
 
ரஜினிகாந்தின் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள ‘வேட்டையன்’ திரைப்படம், மிகப்பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, இரண்டரை நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் டிரைலர் சற்று முன்பு வெளியிடப்பட்டு, வைரல் ஆகி வருகிறது.
 
இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், ரஜினியின் பஞ்ச் வசனங்கள், அமிதாப் பச்சன் மற்றும் பகத் பாசில் ஆகியோர் இணைந்துள்ள முக்கிய காட்சிகள் என பல அம்சங்கள் உள்ளதால், ரஜினி ரசிகர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், இந்த படத்தின் டிரைலர் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva