நயன்தாராவை அடுத்து ஐஏஎஸ் அதிகாரி வேடத்தில் வரலட்சுமி
ஐஏ.எஸ் அதிகாரி வேடத்தில் நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் நடிகை வரலட்சுமி அடுத்த மாதம் வெளியாகவுள்ள 'மாரி 2' படத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார்
தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கிய 'மாரி 2' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 21ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தில் நடித்தவர்களின் கேரக்டர்கள் கடந்த சில நாட்களாக வெளியாகி வருகிறது.
இதன்படி நடிகை சாய்பல்லவியின் கேரக்டர் ஆராத்து ஆனந்தி என்றும் கிருஷ்ணாவின் கேரக்டர் கலை என்றும், டொவினோ தாமஸ் கேரக்டர் பீஜா என்றும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன் வரலட்சுமியின் கேரக்டர் 'விஜயா' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் அவர் சட்டத்துறை மற்றும் நீதித்துறை இணை செயலாளராக நடித்துள்ளார்.
மேலும் வரலட்சுமியின் கெட்டப்புடன் கூடிய புதிய புகைப்படங்களும் வெளியாகி இணையதளத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது. 'சண்டக்கோழி 2' மற்றும் 'சர்கார்' ஆகிய இரண்டு படங்களிலும் வில்லியாக நடித்த வரலட்சுமி, இந்த படத்தில் வித்தியாசமாகா ஐஏஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.