1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 18 ஜூன் 2020 (09:31 IST)

வனிதாவின் 3வது கணவர் இவர்தான்: வைரலாகும் புகைப்படம்

விஜய் நடித்த சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அதன் பின்னர் ஒருசில படங்களில் மட்டும் நடித்த வனிதா விஜயகுமார் சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழ்பெற்றார். இந்த நிலையில் அவ்வப்போது அவர் சமையல் நிகழ்ச்சி உள்பட பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இடம்பெற்று கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மூன்று குழந்தைகளுக்கு தாயான வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து அந்த செய்தியை வனிதா விஜயகுமார் உறுதி செய்தார் என்பதும் தெரிந்ததே. வரும் 27ம் தேதி மாலை 4 மணிக்கு தனது வீட்டில் தனது திருமணம் நடக்க இருப்பதாகவும் பீட்டர் பால் என்பவர் தான் மணமகன் என்றும் வனிதா விஜயகுமார் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் தகவல் தெரிவித்துள்ளார் 
 
அதுமட்டுமின்றி தான் மணக்க போகும் மணமகன் பீட்டர் பால் என்பவரின் புகைப்படத்தையும் அவர் தற்போது பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படமும் வனிதா விஜயகுமாரின் பதிவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது மேலும் பிக்பாஸ் ரசிகர்கள் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்கள் வனிதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது