புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 21 மார்ச் 2022 (11:20 IST)

10000 அடி கட் அவுட்…. வலிமை ஓடிடி ரிலிஸை முன்னிட்டு பிரம்மாண்டமாக நடக்கும் விளம்பரப் பணிகள்!

அஜித்தின் சமீபத்தைய படமான வலிமை விரைவில் ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த படம் வலிமை. இந்த படத்தை போனிக்கபூர் தயாரித்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக தீவிர எதிர்பார்ப்பில் இருந்த இந்த படம் சமீபத்தில் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது.

தற்போதும் திரையரங்குகளில் வலிமை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த வாரம் ஓடிடியில் வலிமை வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வலிமை ஓடிடி உரிமையை பெற்றுள்ள ஜீ5 ஓடிடி தளம் அடுத்த வாரம் மார்ச் 25 அன்று படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வலிமை ஓடிடி ரிலீஸுக்காக சென்னையின் முக்கியப் பகுதியான YMCA மைதானத்தில் 10000 அடியில் பிரம்மாண்ட கட் அவுட்டை ஜி நிறுவனம் வைத்துள்ளது.