வலிமை ஓடிடி ரிலீஸ் தேதி?! அடுத்த வாரம் ரிலீஸா? – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
அஜித்குமார் நடித்து திரையரங்கில் வெளியான வலிமை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த படம் வலிமை. இந்த படத்தை போனிக்கபூர் தயாரித்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக தீவிர எதிர்பார்ப்பில் இருந்த இந்த படம் சமீபத்தில் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது.
தற்போதும் திரையரங்குகளில் வலிமை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த வாரம் ஓடிடியில் வலிமை வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வலிமை ஓடிடி உரிமையை பெற்றுள்ள ஜீ5 ஓடிடி தளம் அடுத்த வாரம் மார்ச் 25 அன்று படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.