செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (20:18 IST)

வசூல் வேட்டையில் ''வலிமை''....அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஹெச்.  வினோத் இயக்கத்தில்  நேற்று வெளியான படம் வலிமை. இப்படத்திற்கு  மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளதால், படக்குழுவினரும் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இ ந் நிலையில் வலிமை படம் நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.36.17 கோடி தமிழகம் முழுவதும் வசூல் குவித்துள்ளதாக கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்தை படம் இதற்கு முன் ஒரே நாளில் ரூ.34.92 கோடியும்,  விஜய் நடித்த சர்க்கார் படம் ரூ.34 கோடியும் வசூலீட்டியதாகவும் இதை வலிமை படம் முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.