செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Modified: புதன், 20 நவம்பர் 2019 (17:49 IST)

"வானம் கொட்டட்டும்" படத்தின் "ஈசி கம் ஈசி கோ" பாடல் வெளியானது !

குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மணிரத்னத்தின் சிஷ்யன் தனா இயக்கும் 'வானம் கொட்டட்டும்' படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், சாந்தனு, அமித்ஷா பிரதான்,  பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
மணிரத்னம்  மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. வயதான கெட்டப்பில் அப்பா , அம்மாவாக சரத்குமார் மற்றும் ராதிகா நடிக்க அவர்களது மகனாக விக்ரம் பிரபு நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து வருகிற 2020 ஜனவரியில் இப்படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் தான் இப்படத்தில் இடம்பெறவுள்ள "கண்ணு தங்கம்" என்ற பாடல் வெளியானது. 
 
இந்நிலையில் தற்போது "ஈசி கம் ஈசி கோ" என்ற செகண்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகியுள்ளது. சித் ஸ்ரீராம் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை சித் ஸ்ரீராம், சஞ்சீவ், தபஸ் நரேஷ் ஆகியோர் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.