1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Modified: சனி, 9 நவம்பர் 2019 (18:09 IST)

கோடீஸ்வரி நிகழ்ச்சி : நடிகை ராதிகாவுக்கு இந்திய சூப்பர் ஸ்டார் வாழ்த்து

'கலர்ஸ்'(colors) தமிழில் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் நடிகை ராதிகா சரத்குமார்.  இதற்கு இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள அத்துணை மொழித்  தொலைக்காட்சிகளிலும் ஒரு பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சிதான். இப்போதும் திறமையான நபர்கள் இந்த நிகழ்ச்சிக்கான பரிசித்தொகையான ஒரு கோடியை வெல்லும் முனைப்புடன் உள்ளனர்.
 
இந்நிலையில், தமிழ் கலர்ஸ் சேனலில் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சியை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கவுள்ளார். இதற்கு இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.