ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 17 ஏப்ரல் 2021 (17:14 IST)

தனி விமானத்தில் வந்து விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின்

நடிகர் விவேக்கின் இறுதி அஞ்சலிக்காக உதயநிதி ஸ்டாலின் மதுரையில் இருந்து தனி விமானம் மூலமாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலை உயிரிழந்தார். அவரது இறப்பு தமிழ் திரையுலகினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பலரும் அவரது உடல் வைக்கப்பட்ட சாலிகிராமம் வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்தி சென்றனர்.

இந்நிலையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் இருந்து தனி விமானம் மூலமாக சென்னைக்கு வந்து விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.