வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 17 ஏப்ரல் 2021 (16:55 IST)

’’சினிமாவில் காமெடி ஹீரோ’’ விவேக்கிற்கு இறுதி ஊர்வலம் !

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலை உயிரிழந்தார். அவரது இறப்பு தமிழ் திரையுலகினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மக்கள் , திரைநட்சத்திரங்கள் , திரளான ரசிகர்களின் பேரணியுடன் நடிகர் விவேகிற்கு இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது.

நடிகர் விவேக்கிற்காக ஓர் இரங்கல் பா !

#ActorViveksir #passedaway #TamilCinema
சினிமாவில் ஒரு சமூக
மறுமலர்ச்சி உங்களால்
பூத்தது...
அதை இச்சமூகம்
மறுப்பேதுமின்றி மனதால்
நேசித்தது...
இன்று அதற்கான சாட்சிதான்
ஊர்கூடி இழுக்குது உன்
புகழ்த்தேரை....
நீங்கள் நட்ட மரமெல்லாம்
நன்றியுடன்  தலையசைத்துக்
கூறிடும் உம் பேரை ...
நெஞ்சம் தாங்கவொண்ணாத
தீராத வலிகளுடன்
ஆழ்ந்த இரங்கல்...
என்றும் மறக்கமுடியாத
நினைவில்நிற்கும் நம்பிக்கை
நட்சத்திரம் நீங்கள்...
 
சினோஜ்