திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 17 ஏப்ரல் 2021 (15:05 IST)

என் நண்பன்...துக்கம் தொண்டையை அடைக்குது - வடிவேலு கண்ணீர் வீடியோ!

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலை உயிரிழந்தார். அவரது இறப்பு தமிழ் திரையுலகினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் தற்போது சக காமெடி நடிகரான வடிவேலு விவேக் மரணம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், என் நண்பனுக்கு இப்படி ஒரு மரணம் வந்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ரொம்ப நல்லவன் அப்துல் கலாம் ஐயா உடன் நல்ல நெருக்கமாக இருப்பான். அவனை பற்றி பேசும்  போது துக்கம் தொண்டையை அடைக்கிறது. அவன் ஆன்மா நல்ல சாந்தியடையட்டும் என கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.