செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 2 நவம்பர் 2024 (14:00 IST)

முதல் இரண்டு நாட்களில் வசூல் மழை பொழிந்த லக்கி பாஸ்கர்… எவ்வளவு தெரியுமா?

தமிழ் மற்றும் தெலுங்கில் தனுஷ், சம்யுக்தா ஆகியோர் நடிப்பில் உருவான் வாத்தி படத்தை தெலுங்கு இயக்குனரான வெங்கட் அட்லூரி இயக்கி இருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இந்த படம் வசூல் ரீதியாகக் வெற்றிப்படமாக கருதப்பட்டது. இதையடுத்து வெங்கட் இயக்கும் அடுத்த பேன் இந்தியா படமான லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.

இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. பீரியட் படமாக உருவாகியுள்ள வரும் இந்த படத்தில் வங்கி ஊழியராக துல்கர் சல்மான் நடித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு மூன்று மொழிகளில் இந்த படம் அக்டோபர் 31 ஆம் தேதி ரிலீஸானது. பங்குச் சந்தை ஊழலில் வங்கிகளின் பங்கு என்ன என்பது குறித்து இந்த படம் பேசியுள்ளது. விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு வெளியான படங்களில் அமரன் படத்துக்குப் பிறகு பெரிய வசூலை இந்த படம் பெற்றுள்ளது. முதல் இரண்டு தினங்களில் இந்த படம் 26 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. அடுத்த இரு நாட்களும் விடுமுறை என்பதால் விரைவில் 50 கோடி ரூபாய் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.