விஜய் சேதுபதி படத்தில் பாடும் தொலைக்காட்சி புகழ் ரமணியம்மாள்

Last Updated: சனி, 26 மே 2018 (11:18 IST)
கோகுல் இயக்கி வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ஜுங்கா படத்தில், பிரபல தொலைக்காட்சி புகழ் ரமணியம்மாள் பாடல் ஒன்றை  பாடியிருக்கிறார். 
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ஜுங்கா’. கோகுல் இயக்கி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாயிஷா நடித்து வருகிறார். படப்பபிடிப்பு முழுவதும் பாரீசில் படமாக்கப்பட்டு வந்தது. தற்போது படப்பிடிப்பு பெரும்பாலும் நடந்து முடிந்துள்ளது. இப்படத்திற்கு சித்தார்த் விபின்  இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. இந்த படத்தில் வரும் ஒரு பாடலை பிரபல தொலைக்காட்சியில் புகழ் பெற்ற ரமணியம்மாளை பாட வைத்திருக்கிறார்  இசையமைப்பாளர்.
விஜய் சேதுபதி - கோகுல் கூட்டணியில் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் வெளியாகி செம ஹிட் கொடுத்தது. அதனால் இந்த படத்திற்கும் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :