1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : சனி, 28 ஏப்ரல் 2018 (11:57 IST)

ரஜினி நடிக்க மறுத்த கேரக்டரில் விஜய் சேதுபதி

ரஜினி நடிக்க மறுத்த கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
ரஜினி நடிப்பதாக கூறப்பட்ட படம் ‘கடைசி விவசாயி’. ‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ படங்களை இயக்கிய மணிகண்டன், இந்தப் படத்தை இயக்குகிறார்.
 
2016ஆம் ஆண்டு ‘ஆண்டவன் கட்டளை’ படம் ரிலீஸானது. அதன்பிறகு ரஜினியை வைத்து இயக்கலாம் என மணிகண்டன் காத்திருக்க, ரஜினியோ ‘2.0’ மற்றும் ‘காலா’ படங்களில் பிஸியாகிவிட்டார். அதற்குப் பிறகாவது ரஜினி கால்ஷீட் தருவார் எனக் காத்திருந்தார் மணிகண்டன். ஆனால், அவரோ கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடிக்கப் போகிறார்.
இனிமேலும் காத்திருக்க முடியாது என்று நினைத்த மணிகண்டன், தன்னுடைய முந்தைய பட ஹீரோவான விஜய் சேதுபதியை வைத்து ‘கடைசி விவசாயி’ படத்தை இயக்கப் போகிறார். யோகி பாபு இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.