விஜய் சேதுபதிக்கு ஊட்டிவிட்ட சிம்பு: வைரலான புகைப்படம்

simbu
Last Modified புதன், 2 மே 2018 (12:57 IST)
செக்கச் சிவந்த வானம் படப்பிடிப்பின்போது சிம்பு, விஜய் சேதுபதிக்கு  ஊட்டிவிட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய்சேதுபதி, அரவிந்தசாமி, அருண்விஜய், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அதிதிராவ், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடிக்கும் திரைப்படமான 'செக்க சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. 
 
பின்னர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் போராட்டத்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது ஸ்ட்ரைக் முடிந்து மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
film
இந்நிலையில் செக்க சிவந்த வானம் ஷூட்டிங் ஸ்பாட்டில், சிம்பு விஜய்சேதுபதிக்கு உணவு ஊட்டி விடும் காட்சி வெளியாகியுள்ளது. இதைப்பார்த்து சிம்பு, விஜய்சேதுபதி ரசிகர்கள் அவர்களின் நட்பு தொடர வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :