ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (14:38 IST)

தளபதி 67 படத்தில் த்ரிஷா நாயகியா? 16 வருடங்களுக்கு பின் இணைவார்களா?

Trisha
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்க்ம் தளபதி 67 திரைப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் 16 ஆண்டுகளுக்குப் பின் இருவரும் இணைகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
தளபதி 67 திரைப்படத்தில் சமந்தா நடிக்க இருப்பதாகவும் ஆனால் அவர் வில்லி கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தளபதி67 படத்தில் விஜய் ஜோடியாக த்ரிஷா நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது 
 
விஜய்யுடன் கடைசியாக நடிகை திரிஷா கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ஆதி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், அதற்கு முன் கில்லி, திருப்பாச்சி படங்களில் விஜய்யுடன் நடித்திருந்தார் 
 
இந்த நிலையில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விஜய்யுடன் த்ரிஷா நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.