1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (08:46 IST)

லால் சிங் சத்தா படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்?... நாக சைதன்யா கூறிய பதில்!

அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள லால் சிங் சத்தா திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படம் ஆஸ்கர்களை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் இன்று வரை உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படமாக உள்ளது.  இந்த படத்திஅ 25 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் சட்டா எனும் பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

லால் சிங் சத்தா திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 11 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமீர்கான் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதால் இந்தியா முழுவதும் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தை தமிழில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் நாக சைதன்யா நடித்துள்ளார். ஆனால் முன்பு இந்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதிதான் நடிப்பதாக இருந்தது. அவர் விலகிய பின்னர் நாக சைதன்யா ஒப்பந்தம் ஆனார். இந்நிலையில்  இப்போது அவர் விஜய் சேதுபதி ஏன் விலகினார் என்பது குறித்து பேசியுள்ளார். அதில் “அந்த நேரத்தில் அவர் பல படங்களில் நடிக்க இருந்த்தால் இந்த படத்துக்காக தேதிகளை ஒதுக்க  முடியவில்லை. அதனால் தயாரிப்பாளரிடம் கூறிவிட்டு அவர் விலகினார்.” எனக் கூறியுள்ளார்.