1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 6 ஆகஸ்ட் 2022 (16:21 IST)

லோகேஷ் கனகராஜ் படத்தில் விஜய்யுடன் மோதும் 6 வில்லன்கள்!

master
நடிகர் விஜய் அடுத்து நடிக்கவுள்ள விஜய்67 படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

இப்படத்தை அடுத்து, விஜய் நடிக்கவுள்ள படம் விஜய்67. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின், லோகேஷ் – விஜய் இணையவுள்ள படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் வேலைகளைத் தொடங்கியுள்ளதால், சமூக வலைதளத்தில் இருந்து தற்காலிகமாக விலகவுள்ளதாக லோகேஷ் தெரிவித்தார்.

இந்த நிலையில், விஜய்67 படத்தில்,கே.ஜி.எஃப்-2 பட வில்லன் சஞ்சய் சத், மலையால நடிகர் பிரித்விராஜ் உள்ளிட்ட 6 பேர் விஜய்க்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.