திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2019 (11:55 IST)

பிகில் படத்தைத் திரையிட மறுத்த தியேட்டர் – பின்னணி என்ன ?

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரம்பா தியேட்டர் தீபாவளிக்கு பிகில் திரைப்படத்தை திரையிட மறுத்துள்ளது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. அதனால் தமிழகம் முழுவதும் உள்ள முன்னணி திரையரங்கங்கள் பிகில் படத்தை திரையிட்டு வசூலை வாரிக்குவிக்கும் முனைப்பில் உள்ளன. கிட்டதட்ட அனைத்து திரையரங்கங்களும் பிகில் படத்தை திரையிட விரும்புகையில் திருச்சியில் உள்ள ரம்பா திரையரங்கம் மட்டும் பிகிலைத் திரையிட மறுத்துள்ளது.

திருச்சியில் உள்ள முன்னணி திரையரங்கமான அதை விநியோகஸ்தர்கள் தொடர்புகொண்ட அவர்களின் இந்த முடிவைத் தெரிவித்துள்ளனர். இந்த முடிவுக்குக் காரணம் ரம்பா திரையரங்கம் பேருந்து நிலையத்துக்கு அருகில் இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டம் என்ற பேரில் செய்யும் அலப்பறைகளால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். மேலும் தியேட்டர் உள்ளேயும் ரசிகர்கள் ஆடல் பாடலின்போது இருக்கைகளை சேதப்படுத்துகின்றனர். இதுபோன்ற தேவையற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டே பிகில் படத்துக்குப் பதிலாக கைதி படம் திரையிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.