1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2019 (18:09 IST)

ஒரே நாளில் நேருக்கு நேர் மோதும் பிகில்-கைதி

இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் விஜய்யின் ‘பிகில்’ மற்றும் கார்த்தியின் ’கைதி’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும்  விஜய்யின் பிகில் அக்டோபர் 25ஆம் தேதியும் கார்த்தியின் கைதி அக்டோபர் 27-ஆம் தேதியும் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது
 
ஆனால் இன்று அடுத்தடுத்து வந்த அறிவிப்பின்படி இரண்டு படங்களும் ஒரே நாளில் அதாவது அக்டோபர் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் இரு படங்களும் ஒரே நாளில் நேருக்கு நேர் மோதுவது உறுதியாகியுள்ளது.
 
இரண்டு திரைப்படங்களும் சென்சாரில் ‘யூஏ’ சான்றிதழ் பெற்று ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இரண்டு படங்களும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி திருநாள் ஞாயிறு அன்று வருவதும், திங்களன்றே பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளதாலும் அக்டோபர் 25ஆம் தேதியே இரு படங்களும் ரிலீஸ் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
என்னதான் ஒரே நாளில் ரிலீஸ் ஆனாலும் படத்தின் ரிசல்ட்டை பொருத்தே வெற்றிப்படம் எது? என்பதை முடிவு செய்ய முடியும். அந்த வகையில் பிகில், கைதி ஆகிய இரண்டு படங்களில் வசூல் அளவிலும் ரசிகர்களின் வரவேற்பு வகையிலும் வெற்றி பெறும் படம் எது? என்பதை இன்னும் பத்து நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்