1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 16 அக்டோபர் 2019 (21:40 IST)

’பிகில்’ பட வியாபாரம் தயாரிப்பாளருக்கு லாபமா? நஷ்டமா?

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படம் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் வியாபாரம் ஆகியுள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 185 கோடி ரூபாய் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் 200 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளது
 
இந்த வியாபாரம் முழுக்க முழுக்க அவுட்ரேட் முறையில் செய்யப்பட்டுள்ளதால் இந்த திரைப்படத்தின் வெற்றி அல்லது தோல்வி தயாரிப்பாளரை பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஆனாலும் தயாரிப்பாளருக்கு அதிக தொகை கிடைக்காது, 200 கோடி ரூபாய்க்குள் வசூல் ஆகி படம் நஷ்டம் அடைந்தாலும் தயாரிப்பாளரிடம் நஷ்ட ஈடு கேட்க முடியாது. அதன் அடிப்படையில்தான் இந்த வியாபாரம் முடிந்து உள்ளது 
 
இந்த நிலையில் கோலிவுட்டில் பழம் தின்று கொட்டை போட்ட பிரபல தயாரிப்பாளர்கள் இந்த வியாபாரம் குறித்து கூறுகையில் ’185 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட ஒரு படம் வெறும் 15 கோடி ரூபாய் மட்டுமே லாபம் கொடுத்திருந்தால் அது ஒரு நல்ல பிசினஸ் கிடையாது. இந்த படம் ஆரம்பித்து சுமார் ஆறு மாத காலம் ஆகியுள்ள நிலையில், 185 கோடி ரூபாய்க்கு வட்டிக் கணக்குப் போட்டால் கூட இந்த படத்தின் படத்தின் லாபம் இல்லை என்றும் மொத்தத்தில் விஜய்யை வைத்து ஒரு படம் தயாரித்தோம் என்ற கௌரவம் மட்டுமே தயாரிப்பு நிறுவனத்திற்கு மிஞ்சும் என்றும் கூறியுள்ளனர் 
 
சமீபத்தில் வெளியான தனுஷின் அசுரன் திரைப்படம் வெறும் 35 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு 100 கோடி ரூபாய் வசூல் செய்தது தான் ஒரு உண்மையான வெற்றி என்றும் ஒரு வெற்றிப்படம் என்றால் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்றும், 185 கோடி செலவு செய்து 15 கோடி லாபம் என்பது உண்மையான வெற்றி கிடையாது என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்