புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 8 மே 2020 (15:40 IST)

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் திரையரங்குகளை திறபக்கலாம்- சினிமா பிரபலம் அதிரடி!

தமிழக அரசு விரைவில் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கும் முனைப்பில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு படிப்படியாக அமல் படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் அதிகமாகக் கூடும் டாஸ்மாக் கடைகளே நேற்று முதல் திறக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் அடுத்த மாத தொடக்கத்தில் பாதி இருக்கைகளில் ஆள் நிரப்பி திரையரங்குகளையும் திறக்க அனுமதி வழங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஒரு வாய்ஸ் மெஸேஜை அனுப்பியுள்ளார். அதில் சில கோரிக்கைகளை கூறி அவற்றை நிறைவேற்றாத பட்சத்தில் திரையரங்குகளை தொடர்ந்து நடத்தினால் அது நஷ்டத்தில்தான் முடியும் எனக் கூறியுள்ளார்.

அவரின் கோரிக்கைகள்
  • ஃபிலிம் நடைமுறையில் அத்தியாவசியமாக இருந்த ஆப்ரேட்டர் உரிமம். தற்போது டிஜிட்டல் முறைக்குத் தேவையில்லை. அதனை ரத்து செய்ய வேண்டும்.
  • திரையரங்கிற்கான புதுப்பிக்கும்  உரிமையை ஆண்டுக்கு ஒரு முறை என்பதில் இருந்து 3 வருடத்துக்கு ஒரு முறை என நீட்டிக்க வேண்டும்.
  • பெரிய திரையரங்குகளை சிறிய திரையரங்குகளாக மாறுதல் செய்து கொள்ள பொதுப்பணித்துறை, மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் அனுமதி பெறத் தேவையில்லை என அனுமதிக்க வேண்டும்.
  • புதிதாக திரையரங்குகள் கட்டும் போது 10% காலியிடம் ஒதுக்க வேண்டும் என்கிற விதியை ரத்து செய்ய வேண்டும்.
  • தமிழகத்தில் மட்டுமே வசூலிக்கப்படும் 8% கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்