செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 6 மே 2020 (16:40 IST)

டாஸ்மாக்குக்கு ஏன் செல்லக்கூடாது? லாஜிக்கான காரணங்கள்! #வாட்ஸ்ஆப்பகிர்வு

நாளை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் கடைக்கு ஏன் செல்லக் கூடாது என்பதற்கு சில முக்கியமானக் காரணங்கள் சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கினால் செயல்படாமல் இருந்த மதுக்கடைகள் நாளை முதல் இயங்க உள்ளன. சென்னை மற்றும் சில பகுதிகளை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை நீடிக்க போலீஸார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எவ்வளவுதான் பாதுகாப்புகளை நீட்டித்தாலும் இந்த நேரத்தில் டாஸ்மாக்கை திறப்பது அபாயகரமானது என பொதுமக்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை ஏன் டாஸ்மாக் சென்று சரக்கு வாங்கக் கூடாது என்பதற்கு சில பல காரணங்களை பட்டியலிட்டு வாட்ஸ் ஆப்பில் ஒரு பதிவு வேகமாகப் பரவி வருகிறது.
அந்த பதிவு:-
 
  • தயவு செய்து நாளை டாஸ்மாக் செல்ல வேண்டாம்.
  • ஒருவேளை நீங்கள் மது வாங்க நாளை டாஸ்மாக் செல்லும் நபராக இருந்தால் இதை படிக்கவும்.
  • நீங்கள் மது வாங்க டாஸ்மாக் செல்வீர்கள்
  • கூட்டத்தில் உங்களுடன் தொடர்பில் இருந்த யாருக்கோ கொரோனா பாசிட்டிவ் வருகிறது என வைத்துக்கொள்வோம்.
     
  • அரசு உடனடியாக அவருடன் டாஸ்மாக்கில் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய முற்படும்.\
  • தாமாகவே தொடர்பிலிருந்தவர்கள் முன்வர வேண்டுமென அழைப்பார்கள். ஒருவேளை நீங்கள் முன்வரவில்லை என்றால் CCTV கேமரா, டிராபிக் சிக்னல் கேமரா மூலம் உங்கள் வீடுதேடி வருவார்கள்.
  • நீங்கள் 108 ஆம்புலன்ஸில் ஏற்றப்படுவதை உங்களுக்கு ஆகாத பக்கத்துவீட்டுக்காரன் வீடியோ எடுத்து வாட்சாப்பில் பரவ விடுவான்.
  • உங்களுடன் தொடர்பில் இருந்த மனைவி, குழந்தைகள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
  • உங்களுக்கு பரிசோதனை முடிவுகள் வர ஒரு வாரம் கூட ஆகலாம். நெகட்டிவ் என்றும் வரலாம்.
  • ஆனால் அதற்குள் நீங்கள் வசிக்கும் பகுதி வேலியால் அடைக்கப்படும். அனைவரும் ஏசுவார்கள். உங்கள் வீட்டில் நோட்டிஸ் ஒட்டப்படும். வில்லனாக நீங்கள் சித்தரிக்கப்படுவீர்கள்.
  • நீங்கள் கொரோனா பாதித்தவர் இல்லை என்றாலும், மக்கள் தவறாக உங்கள் மீது விஷமத்தை பரப்புவார்கள். நீங்களும் உங்கள் குடும்பத்தை சார்ந்தவர்களும் சமூகத்தால் நிராகரிக்கப் படுவீர்கள். வெறுமை உங்களை சூழ்ந்து கொள்ளும். மனஅமைதி எட்டக்கனியாய் மாறிவிடும்.
  • நான் மிகைப்படுத்தி கூறுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், கொரோனா பாதித்து இறந்த மருத்துவரின் உடலை புதைக்க இடம் கூட தராமல் மறுத்த அவலம் நிகழ்ந்து இந்த சமூகத்தில் தான் என்பதை அறிவோம்.
  • குடிப்பது மிகக்கொடிய செயல் என்றெல்லாம் நான் ஒருபோதும் கூறப்போவதில்லை. ஆனால், குடிப்பதற்கான நேரம் இது அல்ல. பாதுகாப்பான சூழலும் இது அல்ல.
  • வீட்டிலேயே இருங்கள். நேரம் கை கூடி வரும்போது நீங்கள் விரும்பியதை செய்து கொள்ளுங்கள்.
  • தயவுசெய்து யோசித்து பாருங்கள்.
    மனிதன் மிகக்கொடிய மிருகம். அந்த மிருகத்தின் சுயநலத்திற்க்காக இரையாகி விடாதீர்கள்.