1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 6 மே 2020 (17:10 IST)

குஷ்பு வைத்த கோரிக்கை: முதல்வருடன் பேசுவதாய் அமைச்சர் பதில்!!

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருவது பற்றி முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பெரியதிரையில் பணியைத் தொடர அனுமதிக்க வேண்டுமென செல்வமணி அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று சின்னத்திரை பணியை தொடங்க அனுமதி கோரி நடிகை குஷ்பு மற்றும் சுஜாதா விஜயகுமார் அமைச்சர் செல்லூரி ராஜூவை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். 
 
இதனைத்தொடர்ந்து சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருவது பற்றி முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் அதேபோல திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அனுமதியளிப்பது பற்றியும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.